Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

"முதல் தடவ பொறாமைப்படுறேன்".. Ponniyin Selvan பத்தி மீனாவின் வைரல் Insta பதிவு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, பின்னர் தொண்ணூறுகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் வலம் வந்தார்.

Actress meena insta post about nandini character in ps 1

தமிழ் திரை உலகைத் தாண்டி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார் மீனா.

அது மட்டுமில்லாமல், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போதும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் மீனா கவனம் செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது கணவர் திடீரென உயிரிழந்தது அவரை கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருந்தது. தொடர்ந்து, தற்போது மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வரும் நடிகை மீனா, தனது நண்பர்களை சந்திப்பதும், வெளி இடங்களுக்கு செல்வதும் என இருந்து வருகிறார். அதே போல, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் முன்பு போல மீனா இயங்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக மீனா பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவு ஒன்று, சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, நாளை (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், இந்த படத்தின் டிரெயிலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரம் குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த நடிகை மீனா, "இதற்கு மேல் இதனை நான் மூடி வைக்க முடியாது. அது என்னை திணறடிக்கிறது. எனது வாழ்க்கையில் முதல் முறையாக ஒருவரை பார்த்து பொறாமைப்படுகிறேன்" என குறிப்பிட்ட மீனா, ஐஸ்வர்யா ராயை டேக் செய்துள்ளார். மேலும், தனது கனவு கதாபாத்திரமான நந்தினியில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு வாய்ப்பு கிடைத்தது தான் இதற்கு காரணம் என்றும் ஜாலியாக மீனா தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெற படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களையும் மீனா குறிப்பிட்டுள்ளார். நந்தினி கதாபாத்திரம் பற்றி மீனா பகிர்ந்த இன்ஸ்டா பதிவு, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress meena insta post about nandini character in ps 1

People looking for online information on Aishwarya rai, Mani Ratnam, Meena, Ponniyin Selvan will find this news story useful.