Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

பொன்னியின் செல்வன் படத்தின் FDFS.. ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் படம் பார்த்த ஜெயம் ரவி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தினை முதல் நாள் முதல் காட்சியை ஜெயம் ரவி ரசிகர்களுடன் கண்டு களித்துள்ளார்.

Jayam Ravi Watching Ponniyin Selvan PS1 with His wife

Also Read | வேற லெவல் லுக்கில் ஶ்ரீ ராமனாக பிரபாஸ்.. 'ஆதி புருஷ்' படத்தின் முதல் லுக் போஸ்டர்!

இயக்குனர்  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  இன்று 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Jayam Ravi Watching Ponniyin Selvan PS1 with His wife

பொன்னியின் செல்வன் படம், IMAX 3டி வடிவத்திலும் ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஆரவாரத்தோடு தமிழகம் முழுவதும் பெரு நகரங்களில் திரையிடப்பட்டது. இந்த படத்தினை ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் மாமியாருடன் சென்னை வெற்றி திரையரங்கில் கண்டுகளித்தார். ரசிகர்களுடன் செல்ஃபி புகைப்படமும் எடுத்து கொண்டார்.

Jayam Ravi Watching Ponniyin Selvan PS1 with His wife

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Jayam Ravi Watching Ponniyin Selvan PS1 with His wife

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

Also Read | "முதல் தடவ பொறாமைப்படுறேன்".. Ponniyin Selvan பத்தி மீனாவின் வைரல் Insta பதிவு!!

பொன்னியின் செல்வன் படத்தின் FDFS.. ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் படம் பார்த்த ஜெயம் ரவி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi Watching Ponniyin Selvan PS1 with His wife

People looking for online information on Jayam Ravi, Jayam Ravi Watching Ponniyin Selvan Movie, Jayam Ravi with his wife, Ponniyin Selvan part 1, PS1, PS1 FDFS will find this news story useful.