www.garudabazaar.com

இந்த 2 வகை ஆண்களில் யாரை Date பண்ணுவீங்க? - நந்திதா ஸ்வேதாவின் Hot பதில்! Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்து வெளியான திரைப்படம் ‘அட்டகத்தி’.

nandita swetha viral answer for fans question trending

பா.ரஞ்சித்தின் முதல் படமான இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் நந்திதா ஸ்வேதா. அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் ‘குமுதா’ என்கிற வேடத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு நந்திதா ஸ்வேதா பிரபலமானார், அதுமட்டுமல்லாது குமுதா என்கிற பெயரும் பிரபலமானது.

nandita swetha viral answer for fans question trending

இப்படி பல திரைப்படங்கள் நடித்து வந்த நந்திதா ஸ்வேதா அண்மையில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியான, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் தன்னுடைய வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்ட புதிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் அசத்தியிருந்தார். இதேபோல் சன் டி.வியில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் சிறப்பு ஒளிபரப்பு காட்சியில் ஒருநாள் என்ட்ரி கொடுத்து அசத்தினார்.

nandita swetha viral answer for fans question trending

இந்தநிலையில் ரசிகர்களிடையே தம்முடைய இன்ஸ்டாகிராம் மூலம் நேரலையில் உரையாடிய நந்திதா ஸ்வேதா ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதுவா? அதுவா? என்கிற வகையான கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்த நந்திதா ஸ்வேதாவிடம், ரசிகர்கள் நிறைய கேள்விகளை கேட்டு இருக்கின்றனர். 2015 ஆண்டு இருந்த நந்திதாவா? 2021 ஆம் ஆண்டு நந்திதாவா? என்கிற கேள்விகளுக்கு பதிலளித்த நந்திதா 2021 நன்றாகவே இருக்கிறது. 2015 நந்திதாவையும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

nandita swetha viral answer for fans question trending

ALSO READ: விஜய்-யின் சொகுசு கார் மேல் முறையீட்டு வழக்கு.. உயர்நீதிமன்றத்தின் அடுத்த பரபரப்பு உத்தரவு!

நடிகைகள் என்றாலே பெரும்பாலும் மாலத்தீவு, துபாய் என வெளிநாடு மற்றும் தீவுகளுக்கு சென்று நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து போட்டோக்களை எடுத்து போடுவது வழக்கம் என்பதால் ரசிகர் ஒருவர் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். மாலத்தீவா? துபாயா? என்று கேட்கிறார். அதற்கு பதில் அளித்திருக்கும் நந்திதா ஸ்வேதா முகத்தை சுணக்கமாக வைத்துக் கொண்டு, சிரித்தபடி இந்தியா என்று பெருமிதத்துடன் சொல்கிறார். இதேபோல் பீட்சாவா? பர்கரா? என்று கேட்டதற்கு நான் எப்போதுமே ஒரு பீட்சா கேர்ள் என்று பதிலளிக்கிறார்.

nandita swetha viral answer for fans question trending

இது கொஞ்சம் நம்ம ஏரியா என்று சொல்லலாம். ஆம், சைவமா? அசைவமா? என்று ஒரு ரசிகர் ஒருவர் கேட்டதற்கு எப்போதுமே சைவம் என்று பதிலளித்திருக்கிறார். சமைப்பதா? சாப்பிடுவதா? என்று கேட்டபோது கண்டிப்பாக சாப்பிடுவதுதான் என்று பதில் கூறுகிறார். தொடர்ந்து பிரியாணி பிடிக்குமா? ரைஸ் பிடிக்குமா? என்று நந்திதாவை கேட்டதற்கு, தனக்கு எப்போதுமே ரைஸ் தான் பிடிக்கும் என்றும், பிரியாணி ஒரு ஆப்ஷன் தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ: தன் பிறந்த நாளில், தமது ஆண் குழந்தைக்கு யோகிபாபு என்ன பெயர் சூட்டியுள்ளார் தெரியுமா?.. Trending ஃபோட்டோஸ்!

இப்படி வைரலாக பதில் கொண்டிருந்த பதில் சொல்லிக் கொண்டிருந்த நந்திதா ஸ்வேதா 3 அதிமுக்கியமான கேள்விகளையும் எதிர்கொண்டார். உங்களுக்கு rich guy பிடிக்குமா அல்லது caring ஆக இருப்பவர் பிடிக்குமா என்று கேட்டதற்கு caring guy தான் என்று பதில் கொடுத்திருக்கிறார். ஹாட்டா? கோல்டா?. இதற்கு எப்போதுமே ஹாட் தான் என்று பதில் சொல்லி இருக்கிறார். இதேபோல் டேட் பண்ணுவதற்கு ஒரு பிரபலமான ஹாட் guy-ஆ? அல்லது funny ஆன common guy-ஆ? என்று கேட்டதற்கு, பிரபலமான ஹாட் guy-ஆக இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக  funny ஆன common guy இல்லை என்று தெரிவித்துள்ளார். நந்திதாவின் இந்த பதில்கள் வைரல் ஆகி வருகின்றன. 

இந்த 2 வகை ஆண்களில் யாரை DATE பண்ணுவீங்க? - நந்திதா ஸ்வேதாவின் HOT பதில்! VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

nandita swetha viral answer for fans question trending

People looking for online information on Nandita Swetha, Trending will find this news story useful.