www.garudabazaar.com

"நந்திதா ஸ்வேதா" படத்தில் ‘இப்படி ஒரு’ குத்து பாட்டா? வேற லெவல்!.. வெளியான Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நந்திதா ஸ்வேதா Lead கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு குத்துப்பாடல் ஒன்று, தற்போது லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.

Nandita swetha lead Jetty movie JilJil folk song Video

மீனவர்களின் வாழ்க்கையில் உலகமயமாக்கல் எனும் விஷயம் உண்டாக்கியுள்ள  பாதிப்பை மையப் படுத்தி உருவாகியுள்ள இந்த ‘ஜெட்டி’ எனும் திரைப்படத்தில்  மான்யம் கிருஷ்ணா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Nandita sweta lead Jetty movie JilJil Lyrical Video

வர்தின் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேணு மாதவ் தயாரித்துவரும் இந்த படத்தை  சுப்ரமணியம் பிட்சுகா இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு கார்த்திக் கொடகண்டலா இசையில், பிரபல பாடகர் ‘வைக்கம்’ விஜயலஷ்மி பாடியுள்ளார்.

‘ஜில் ஜில்’ என்று தொடங்கும் இந்த குத்து பாடலுக்கு, பிரபல டான்ஸ் மாஸ்டர் நோபல் நடன பயிற்சி அளித்துள்ளார். கடந்த மே மாதமே, ரிலீஸ் ஆகவிருந்த இந்த படத்தின் வெளியீடு, கொரோனா காரணமாக தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாவதாக தெரிகிறது.

ALSO READ: சீரியல் பிரபலங்கள் கலக்கும் 'வார்டு 126'.. முக்கிய கேரக்டரில் சோனியா அகர்வால்!.. வெளியான 'த்ரில்லர்' டீசர்!

Nandita swetha lead Jetty movie JilJil folk song Video

People looking for online information on Jetty, JilJil, Nandita Swetha will find this news story useful.