www.garudabazaar.com

தன் பிறந்த நாளில், குழந்தைக்கு யோகிபாபு என்ன பெயர் சூட்டியுள்ளார் தெரியுமா?.. Trending ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் முக்கியமான நடிகராக மாறி இருப்பவர் நடிகர் யோகி பாபு.

yogi babu reveals son name pm his birthday viral pics

தொடக்கத்தில் பலரும் தன்னுடைய தோற்றத்தை கேலி செய்ததாக சில இடங்களில் குறிப்பிட்டிருக்கும் யோகி பாபு அதையே ப்ளஸ் ஆக மாற்றி ஜெயித்திருக்கிறார். அத்துடன் பலருக்கும் இன்ஸ்பிரேஷனல் மாடலாகவும் வளர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

நடிகர் யோகி பாபு திரைத்துறையில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியதை அடுத்து, அவருடைய காமெடி கவுண்டர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி அவர் அவருக்கே உண்டான உடல் மொழியிலும், டயலாக் டெலிவரியிலும் அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து யோகி பாபு கூர்கா, தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இயக்குநர்கள் தொடர்ந்து அவரை வைத்து நிறைய படங்களை உருவாக்கி வருகின்றனர். இதேபோல் கதாநாயகனாக நடித்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு யோகிபாபு தவறுவதில்லை.

இப்படியான வளர்ச்சிகள் ஒருபுறம் நடக்க, இன்னொருபுறம் புதிய வீடு, திருமணம் என தனிப்பட்ட யோகி பாபுவின் வாழ்க்கையிலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான் யோகிபாபு தனக்கு அண்மையில் பிறந்த ஆண் குழந்தைக்கு, தன்னுடைய இல்லத்தில் பெயர் சூட்டும் விழாவை நடத்தி இருக்கிறார்.

இந்த பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் யோகிபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, புகைப்படங்கள் எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களில் யோகிபாபுவும் அவருடைய மனைவியும் இருப்பதை காண முடிகிறது. யோகிபாபுவின் ஆண் குழந்தை தொட்டிலில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. யோகிபாபுவின் குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா..?  ‘விசாகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல திரைப்பட இயக்குனர் விருமாண்டி, அந்த  புகைப்படங்களை பகிர்ந்து, யோகிபாபுவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை இயக்கிய விருமாண்டி, தன் நெருங்கிய நண்பரான யோகிபாபு வீட்டுக்கு சென்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், “சற்று முன் தனது வீட்டில் பேபிமா நண்பர் யோகிபாபு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் விழா மற்றும் தனது மகனுக்கு விசாகன் என்று பெயர் சூட்டினார் மகிழ்ச்சி” என்று தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் யோகிபாபு தற்போது வலிமை, Beast, டாக்டர், அயலான், அரண்மனை-3, டிக்கிலோனா, நவரசா உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். 

ALSO READ: விஜய்-யின் சொகுசு கார் மேல் முறையீட்டு வழக்கு.. உயர்நீதிமன்றத்தின் அடுத்த பரபரப்பு உத்தரவு!

தொடர்புடைய இணைப்புகள்

yogi babu reveals son name pm his birthday viral pics

People looking for online information on P Virumandi, Yogi Babu will find this news story useful.