www.garudabazaar.com

மிர்ச்சி சிவாவின் புதிய படம்!!... இந்த க்ளாசிக் காமெடி படத்தின் ரீமேக்!! வைரலாகும் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அதர்வா நடிப்பில் ‘தள்ளிப் போகாதே’, சந்தானம் நடிப்பில் ‘பிஸ்கோத்து’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர்.கண்ணன்.

R Kannan Directs Mirchi Siva Is this classic movie remake?

இவர் தற்போது பிரபல மலையாள திரைப்படமான, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார். இந்த நிலையில் மிர்ச்சி சிவாவின் நடிப்பில், இயக்குநர் ஆர்.கண்ணன் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும், மிர்ச்சி சிவாவுடன் ஆர்.கண்ணன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. குறிப்பாக ஆர்.கண்ணன் & மிர்ச்சி சிவா இணையும் இந்த திரைப்படம் ‘காசேதான் கடவுளடா’ எனும் திரைப்படத்தின் ரீமேக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படம் குறித்து இயக்குநர் கண்ணன் கூறும்போது, “இந்த கோவிட் பெருந்தொற்று காலம், அனைவரது மனதிலும் பெரும் அழுத்தத்தை தந்திருக்கிறது. திரைப்படங்கள் மட்டுமே அந்த அழுத்தத்தை போக்கும் மருந்தாக இருந்து வருகிறது. இணைய OTT தளங்களில் சில படங்கள் வெளிவந்து, நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலனவை க்ரைம், ஹாரர் திரில்லர், மர்ம வகை படங்களாகவே இருக்கின்றன. இதனால் மக்களிடம், வயிறு குலுங்க சிரித்து மகிழும் படங்களுக்கான, ஏக்கம் தொடர்ந்து, இருந்து வருகிறது.

தமிழில் வெகுசில படங்களான “காதலிக்க நேரமில்லை, காசேதான் கடவுளடா” மற்றும் சில ரொமான்ஸ் காமெடி படங்கள் மட்டுமே காலம் கடந்து, எப்போது பார்த்தாலும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மனதிற்கு நிறைவு தரும் படைப்புகளாக இருக்கின்றன. அந்த வகையில் “காசேதான் கடவுளடா” திரைப்படம் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு கச்சிதமான படைப்பு, எனவே இப்படத்தின் மறு உருவாக்கத்திற்கான முறையான அனுமதியை பெற்று, தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றவகையில் ரீமேக் செய்யவுள்ளோம். மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி மேடம், கருணாகரன் போன்ற அற்புத திறமை வாய்ந்த எங்கள் குழுவினர், இப்படத்தை மீண்டும் ஒரு அழகான படைப்பாக மாற்றுவார்கள் என மிக ஆழமாக நம்புகிறேன்” என்றார்.

1972-ல் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த திரைப்படம்தான் ‘காசேதான் கடவுளடா’. இந்த படத்தில் எஸ்.பி.முத்துராமன் தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவியான மனோரமாவிடம் இருந்து பணத்தை ஆட்டையைப் போடுவதற்காக தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோருடன் சேர்ந்து சில தகிடுதத்த வேலைகளைச் செய்வார்.

இடையில் தேங்காய் சீனிவாசன் போலி சாமியார் வேடத்தில் அட்ராசிட்டி காமெடிகளை செய்வார். அந்தக் காலத்தில் வெளியான கிளாசிக் காமெடி திரைப்படமான இந்த படத்தை, சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை சித்ராலயா கோபு முதலில் நாடகமாக இயக்கினார். அந்த நாடகத்தில் எஸ்.பி.முத்துராமன் மற்றும் மனோரமா நடித்திருந்தனர். அவர்கள் இருவரும் அதே கதாபாத்திரங்களை திரைப்படத்திலும் ஏற்று நடித்தனர்.

இந்த நிலையில் தான் இந்த கிளாசிக் காமெடி படத்தின் ரீமேக்கில் மிர்ச்சி சிவா நடிப்பதாகவும், அதனை ஆர்.கண்ணன் இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படக்குழுவினர் குறித்த இதர அறிவிப்புகளும் விரைவில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: "அந்த Show-ல இருந்து வெளியேறியதுக்கு காரணம்.." .. நடிகை வனிதா பரபரப்பு பேட்டி Video!

தொடர்புடைய இணைப்புகள்

R Kannan Directs Mirchi Siva Is this classic movie remake?

People looking for online information on Mirchi Shiva, R Kannan, Trending will find this news story useful.