www.garudabazaar.com

இப்பதான் கொஞ்சம் நல்லாச்சு.. அதுக்குள்ள! பாரதி கண்ணம்மாவில் அகிலன் அஞ்சலிக்கு புது பிரச்சனை?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பரபரப்பான தொடர் பாரதி கண்ணம்மா.

problems for bharathi kannamma serial akilan anjali characters

இந்த தொடரில் தற்போது பாரதி கண்ணம்மா தம்பதியருக்கு 8 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஹேமா பாரதியிடமும், லக்‌ஷ்மி கண்ணம்மாவிடமும் வளர்கிறார்கள். ஆனால் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் ஹேமா தங்களது குழந்தை என்று தெரியாது.

problems for bharathi kannamma serial akilan anjali characters

பாரதியை பொருத்தவரை லக்‌ஷ்மி கண்ணம்மாவின் குழந்தை என்றோ அல்லது தன் குழந்தை என்றோ தெரியாது. இத்தனை பிரச்சினைக்கும் நடுவில் தற்போது இந்த சீரியலின் மெயின் வில்லியான வெண்பா, குட்டிப் பெண்ணான ஹேமாவை கடத்தி இருக்கிறார். இதனால் கண்ணம்மா மீது சந்தேகப்படும் பாரதி, கண்ணம்மாவின் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க, ஆனால் கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா தன் செல்வாக்கை பயன்படுத்தி கண்ணம்மாவை பெயிலில் எடுத்துவிட்டார். எனினும் ஹேமா கிடைத்தபாடில்லை.

problems for bharathi kannamma serial akilan anjali characters

இதனிடையே கடத்தல் காரர்களிடம் இருந்து ஹேமா தப்பித்து சுற்றிக் கொண்டிருக்கிறார். முந்தைய எபிசோடில் கண்ணம்மா கூறும்போது எல்லாருக்கும் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல பிரச்சினைகள் வரும். எனக்கு வாழ்க்கை முழுக்க ஒரே பிரச்சினை தான். அதன் பெயர் பாரதி என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படி பாரதி கண்ணம்மாவின் கதை சிக்கலான சூழலில் எப்போதும் இருப்பது வழக்கம்தான்.

problems for bharathi kannamma serial akilan anjali characters

ஆனால் இதில் பாரதியின் தம்பி அகிலனும், அகிலனின் மனைவியான அஞ்சலியும் பல ரசிகர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்கள். முன்னொரு காலத்தில் இவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டும், ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமலும் இருந்துள்ளனர். அதற்கு அஞ்சலியின் கேரக்டரும் ஒரு காரணமாக இருந்தது. தற்போது அஞ்சலி மனம் மாறி விட்டதால் அகிலனுடன் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

problems for bharathi kannamma serial akilan anjali characters

தற்போது அஞ்சலி கர்ப்பம் தரித்திருக்கும் நிலையில் திடீரென மருத்துவமனையில் இருந்து அவருக்கு ஒரு போன் வந்தது. அஞ்சலியை வழக்கமாக பரிசோதிக்கும் மருத்துவர் ஏதோ சீரியஸான விஷயம் போல பொடி வைத்துப் பேசி, அஞ்சலியை ஒருமுறை மருத்துவமனைக்கு வரச் சொல்கிறார். இதை பார்க்கும்போது அகிலன் - அஞ்சலி வாழ்க்கையில் புதிய பிரச்சனைகள் வருவதாக தெரிகிறது.

மருத்துவரிடம் போன் பேசி வைத்ததுமே அஞ்சலி, “ஆஹா.. இப்போதுதான் வாழ்க்கை கொஞ்சம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.. இது என்னடா அதுக்குள்ள வந்த சோதனை!” என்று முணுமுணுக்கிறார்.

இதில் அகிலனாக நடிப்பவர் அகிலன் எஸ்பிஆர். இவர் தற்போது விஷால் நடிப்பில் து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் விஷால்31 திரைப்படத்தில்  நடித்து வருகிறார். இதேபோல் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் பகீரா படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

ALSO READ: தளபதி பத்தி ஷாருக் கான்... ஒரே வார்த்தையில் சொன்ன 'தெறி' பதில்!! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

problems for bharathi kannamma serial akilan anjali characters

People looking for online information on Akilan, AkilanAnjali, AkilanSPR, Anjali, BarathiKannamma, Bharathi Kannamma Serial today episode, BharathiKannamma will find this news story useful.