ஹன்சிகா நடிக்கும் புதிய த்ரில்லர் படம்! .."கதை கேக்கும் போதே மிரண்டுட்டேன்"!! டைட்டில் இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகா மோத்வானி, ரசிகர்களை சீட் எட்ஜில் இருத்தி வைக்கும் "My Name is Shruthi" எனும் பரபர திரில்லர் படத்தில் நடிப்பதில் உற்சாகமாக இருக்கிறார்.

Hansika Motwani My Name Is Shruthi movie Seat edge thriller

சுதந்திரமாக இயங்கும் ஒரு பெண்ணின் வாழ்வை மையமாகக் கொண்ட இந்தப்படம், ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும். அந்த பெண் ஒரு எதிர்பாரத அசாதாரண சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து எவ்வாறு தப்பிச் செல்கிறார் என்பதே கதை என்று ஹன்சிகா குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி பேசியுள்ள ஹன்சிகா, “அனுபவம் மிகுந்த பல நடிகர்கள், இயக்குநர்களுடன் பல்வேறு மொழிகளில் பணிபுரிந்ததில், ஒரு கதை விவரிக்கப்படும்போதே, கதையில் உள்ள நிறை குறைகளை, கதையின் திருப்பங்களை கொஞ்சம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் இயக்குனர் ஶ்ரீநிவாஸ் ஓம்கார் இந்தக்கதையை மிகவும் அற்புதமாக என்னிடம் விவரித்தார். படத்தில் பல காட்சிகளை அவர் விவரிக்கும் போதே நான் சீட் எட்ஜில் தான் அமர்ந்திருந்தேன்.

ஆரம்பத்திலிருந்து படத்தின் கிளைமாக்ஸ் வரை, எந்த இடத்திலும் என்னால் படத்தின் கதை எப்படி செல்லும் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. படத்தில் அமைந்துள்ள திருப்பங்கள் மற்றும் சஸ்பென்ஸ், திரையில் ரசிகர்களை வெகுவாக கவரும் என உறுதியாக நம்புகிறேன். திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள்” என தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தில் நடிகர் முரளி ஷர்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மார்க். கே. ராபின் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார், Kishore Boyidapu ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை Ramya Burugu மற்றும் Nagender Raju இருவரும் Vaishnavi Arts நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர்.

ALSO READ: ‘ஆபாச’ Message அனுப்பிய கல்லூரி மாணவர் கைது!!.. சனம் ஷெட்டியின் உருக்கமான Video!

Hansika Motwani My Name Is Shruthi movie Seat edge thriller

People looking for online information on Hansika Motwani, My name is Shruthi, MyNameIsShruthi will find this news story useful.