பிரபல 'சீரியல்' நடிகர் & 'பட்டிமன்ற' பேச்சாளருக்கு முக்கிய பொறுப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திண்டுக்கல்.ஐ.லியோனியை தமிழ்ச் சூழலில் மக்களிடையே அறிமுகப்படுத்த தேவையில்லை.

Dindigul I. Leoni TN Textbook Educational Services head

பிரபல பட்டிமன்ற பேச்சாளராக வெகுஜன மக்களிடையே பிரபலமான திண்டுக்கல்.ஐ.லியோனியை, அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் காண முடிந்தது.

ஆம், இந்த சீரியலில் தேவயானியின் மாமனாராக முக்கிய கதாபாத்திரத்தில் லியோனி நடித்து வருகிறார். இதனால் சீரியல் பார்வையாளர்களிடமும் லியோனி பிரபலமாக இருக்கிறார்.

இந்நிலையில் தான், தமிழ்நாட்டு பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல்.ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். கலைஞர் மு.கருணாநிதி ஆட்சி காலம் தொட்டே சமூக நீதி கருத்துக்களை பேசிவந்தார் திண்டுக்கல்.ஐ.லியோனி.

Dindigul I. Leoni TN Textbook Educational Services head

தற்போது தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ: ஆபாச’ Message அனுப்பிய கல்லூரி மாணவர் கைது!!.. சனம் ஷெட்டியின் உருக்கமான Video!

தொடர்புடைய இணைப்புகள்

Dindigul I. Leoni TN Textbook Educational Services head

People looking for online information on Dindigul I. Leoni, MKStalin, PuthuPuthuArthangal, TNGovt, Trending, ZeeTamil will find this news story useful.