www.garudabazaar.com

வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'.. தலைவன் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Naai Sekar Returns Movie New Poster for Vadivelu Birthday

Also Read | BREAKING: பிரபல இயக்குனர் இயக்கத்தில் R J பாலாஜி நடிக்கும் புதிய படம்.. செமயான Combo இது! அசத்தல் அப்டேட்

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Naai Sekar Returns Movie New Poster for Vadivelu Birthday

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா  சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தொடங்கின.

Naai Sekar Returns Movie New Poster for Vadivelu Birthday

வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினார். சில நாட்களுக்கு முன் இந்த புகைப்படங்கள் வைரலாகின.

Naai Sekar Returns Movie New Poster for Vadivelu Birthday

இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணன் நடிக்கிறார். சென்னை மற்றும் மைசூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வடிவேலுவின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. நாய் குட்டியை ஒரு பையில் போட்டு வடிவேலு நடனம் ஆடும் ஸ்டில் போஸ்டரில் அமைந்துள்ளது. வடிவேலுவை சுற்றி நடன மங்கைகள் ஆடும் காட்சியும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை படக்குழு வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷலாக சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளது.

Also Read | சிம்பு நடிக்கும் 'பத்து தல'.. மிரட்டலான லுக்கில் கௌதம் கார்த்திக்கின் புதிய போஸ்டர்! மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Naai Sekar Returns Movie New Poster for Vadivelu Birthday

People looking for online information on Naai Sekar Returns, Naai Sekar Returns Movie New Poster, Vadivelu, Vadivelu Birthday will find this news story useful.