www.garudabazaar.com
iTechUS

லோகேஷ் இயக்கத்தில் விஜய்.. தளபதி 67 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் கொடுத்த பிரபல இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Mysskin about Thalapathy 67 Movie Shooting Lokesh Kanagaraj

Beast படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Mysskin about Thalapathy 67 Movie Shooting Lokesh Kanagaraj

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகி உள்ளது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், மிஷ்கின், நடிகை த்ரிஷா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தனியார் டிவி சேனலில் பேசிய இயக்குனர் மிஷ்கின், தளபதி 67 படத்தில் எனக்கும் விஜய்க்கும் சண்டைக் காட்சி உள்ளது. என் முகத்தை, விஜய் அடித்து உடைத்து ரத்தம் வருவது போல் காட்சி படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் மிகவும் துல்லியமாக படம் இயக்குகிறார். நடிப்பில் அவருக்கு என்ன வேண்டுமோ அதை சரியாக வாங்குகிறார்.  படம் நல்லா வந்துட்டு இருக்கு. அருமையான படக்குழுவோடு சேர்ந்து நான் வேலை பார்க்குறேன். மனோஜ் பரமஹம்சா தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்." என மிஷ்கின் பேசியுள்ளார்.

லோகேஷ் இயக்கத்தில் விஜய்.. தளபதி 67 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் கொடுத்த பிரபல இயக்குனர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin about Thalapathy 67 Movie Shooting Lokesh Kanagaraj

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy67, Vijay will find this news story useful.