www.garudabazaar.com

"ஷிவின்க்காக கொண்டு வந்த சர்ப்ரைஸ்?".. மைனாவின் கணவர் வெச்ச ட்விஸ்ட்!! bigg boss tamil 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

Myna Nandhini husband yogesh surprise to shivin bigg boss house

Also Read | ஹவுஸ்மேட்ஸ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்.. களைகட்டிய வீடு.. இதுக்கு தான் Waiting!!.. bigg boss tamil 6

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்த்லும் உள்ளனர்.

இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர்.

Myna Nandhini husband yogesh surprise to shivin bigg boss house

மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர். கடந்த வாரம் குடும்பத்தினர் குறித்து கலங்கிய போட்டியாளர்கள், தற்போது அனைவரையும் நேரில் காணும் டாஸ்க் நடந்து வருவதால் மிகுந்த உற்சாகத்தில் அவர்கள் இருப்பது தெரிகிறது. இந்த நிலையில், மைனா நந்தினியின் கணவரான யோகேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் Freeze டாஸ்க்கின் போது என்ட்ரி கொடுத்துள்ளார்.

Myna Nandhini husband yogesh surprise to shivin bigg boss house

தனது குழந்தை மற்றும் கணவர் யோகேஷ் ஆகியோர், உள்ளே நுழைந்ததும் மைனா சற்று எமோஷனல் ஆகவும் மாறி இருந்தார். இதனைத் தொடர்ந்து, மற்ற போட்டியாளர்கள் அனைவரிடமும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார் யோகேஷ். மறுபக்கம், மனைவி மைனாவுக்கும் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருவது குறித்து நிறைய அறிவுரைகளை வழங்கி இருந்தார். அதே போல, அவர்களின் குழந்தையுடன் அசிம் விளையாடி இருந்தது அதிக கவனம் ஈர்த்திருந்தது.

Myna Nandhini husband yogesh surprise to shivin bigg boss house

இந்த நிலையில், போட்டியாளர் ஷிவினிடம் யோகேஷ் ரியாக்ட் செய்த விஷயங்கள், அதிக வைரலாகி வருகிறது. முதல் வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிற்குள் மைனா நந்தினி நுழைந்த போது அவரிடம் பேசிய ஷிவின், உங்கள் கணவர் யோகேஷை எனக்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டிருந்தார். அதே போல மைனாவும் பதிலுக்கு, எனது கணவருக்கும் உங்களை மிக பிடிக்கும் என கூறி இருந்தார்.

அப்படி ஒரு சூழலில், தற்போது Freeze டாஸ்க்கில் வருகை தந்த யோகேஷ், ஷிவினிடம் பேசுகையில், "ஷிவின்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும். வெளியே வந்தாலும் ஒரு ஃப்ரண்டா நான் இருப்பேன்" என கூறியபடி ஷிவினின் கையை குலுக்க போகிறார். அப்போது மைனா இதனை ஜாலியாக தடுக்க, பின்னர் அவரை கட்டியணைத்து வாழ்த்தவும் செய்கிறார் யோகேஷ். அவரது வார்த்தைக்கு ஷிவினும் நன்றியை வெளிப்படுத்தி இருந்தார்.

Myna Nandhini husband yogesh surprise to shivin bigg boss house

அதே போல, "ஷிவின்க்காக நான் ஒரு விஷயம் எடுத்துட்டு வந்திருக்கேன்" எனக்கூறும் யோகேஷ், தனது பாக்கெட்டில் இருந்து ரோஜா பூவை எடுத்து நீட்டுகிறார். இதனை ஷிவினும் ஏற்றுக் கொள்ள, அவர்கள் அருகே இருக்கும் மைனா நந்தினி வாயடைத்த படி நிற்கிறார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இந்த நிகழ்வை வைத்து மைனா நந்தினியை ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.

Also Read | "நீங்க வெளிய வந்த அப்புறம்".. ஷிவின்கிட்ட மைனா நந்தினியின் கணவர் சொன்ன விஷயம்!!.. bigg boss tamil 6

தொடர்புடைய இணைப்புகள்

Myna Nandhini husband yogesh surprise to shivin bigg boss house

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Myna Nandhini, Myna Nandhini husband yogesh, Shivin, Vijay Television, Vijay tv will find this news story useful.