www.garudabazaar.com

"விரைவில் தென்னிந்திய சினிமாவில்".. சென்னை ஜவுளி கடை திறப்பில் 'நம்ம மயில் பொண்ணு' ஜான்வி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரை உலகின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜான்வி கபூர்.

Janhvi Kapoor Answered about acting in south indian films

Also Read | வாரிசு ஆடியோ லான்ச்ல விஜய் ஹேர் ஸ்டைல்.. ஸ்டைலிஸ்ட் பண்ணது இவரா? வைரல் செல்ஃபி..!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' என்னும் திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகம் ஆகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சில படங்கள் நடித்து வந்த ஜான்வி கபூர், சமீபத்தில் சன்னி கௌஷல் மற்றும் மனோஜ் பஹ்வாவுடன் இணைந்து மிலி என்ற சர்வைவல் த்ரில்லர் திரைப்படத்தில் காணப்பட்டார். இப்படத்தை மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்தார்.  இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன் வெளியான குட்லக் ஜெர்ரி படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Janhvi Kapoor Answered about acting in south indian films

ஜான்வி கபூர், தனது அடுத்த திரைப்படமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹியில் ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி  படத்தில் ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்காக தினேஷ் கார்த்திக்கிடம் ஜான்வி கபூர் கிரிக்கெட் பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Janhvi Kapoor Answered about acting in south indian films

அதுமட்டுமின்றி, அவர் வருண் தவானுடன் இணைந்து பவால் என்ற  படத்திலும் நடித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கிய இப்படம் ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Janhvi Kapoor Answered about acting in south indian films

இந்நிலையில் சென்னை பாண்டி பஜாரில் துவங்கி உள்ள காஞ்சிபுரம் வரலெட்சுமி ஜவுளிக்கடையை திறந்து வைத்த ஜான்வி கபூர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது  "தனக்கு காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மிகவும் பிடிக்கும்" என்றும் தான் தற்போது நடித்து வரும் இந்தி திரைப்படங்கள் குறித்தும் ஜான்வி கபூர் பேசினார். மேலும் "விரைவில் தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆசைப்படுதாகவும்"  ஜான்வி கபூர் பதில் அளித்தார்.

Also Read | ரொம்ப நாள் கழித்து டூர்.. வெளிநாட்டு கடற்கரையில் கீர்த்தி சுரேஷ்.. வைரல் போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Janhvi Kapoor Answered about acting in south indian films

People looking for online information on Janhvi Kapoor, South indian films will find this news story useful.