ரிலீஸான திரௌபதி - தியேட்டரில் ஹவுஸ் புல் ஷோ.. ஆரவாரம் போட்ட ரசிகர்கள். Exclusive Video
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் மோகன்.ஜி இயக்கிய திரௌபதி படம் ரிலீஸானதையடுத்து தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வரும் வீடியோவை பிஹைன்ட்வுட்ஸ் தளம் வெளியிடுகிறது.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன்.ஜி. இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் திரௌபதி. ரிஷி ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ், லேனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். திரௌபதியின் ட்ரெய்லர் வெளியாக பலதரப்பில் இருந்து சர்ச்சையான கருத்துக்களை பெற்றுள்ள நிலையில், இத்திரைப்படம் இன்று வெளியானது.
இதையடுத்து சென்னை ரோகினி தியேட்டரில் படத்தை காண வந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள். மேலும் அவர்கள் இயக்குநர் மோகனை சூழ்ந்து கொண்டு செல்ஃபிக்களை எடுத்து தள்ளினர். இதையடுத்து இயக்குநர் மோகன் கூறியதாவது, '8 மணி ஷோ ஹவுஸ்புல் ஆவது, நான் சொல்ல வந்த கருத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன், சமூக வலைதளங்களில் சொல்வது போல இது சாதி சார்ந்த படம் கிடையாது. மகளை பெற்ற அப்பாக்களுக்கு இப்படத்தை பார்க்கும் போது சுளீர்னு குத்தும், ஒருநாளாவது தூக்கத்தை கெடுக்கும், சென்னையில் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும், ஒரு சின்ன படத்துக்கு மக்கள் இப்படி ஒரு ஆதரவு கொடுப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது' என அவர் தெரிவித்தார்.
ரிலீஸான திரௌபதி - தியேட்டரில் ஹவுஸ் புல் ஷோ.. ஆரவாரம் போட்ட ரசிகர்கள். EXCLUSIVE VIDEO வீடியோ