Godavari News Banner USA

கமலின் இந்தியன்-2 விபத்து - இறந்தவர்கள் குறித்து ஷங்கரின் எமோஷனல் கருத்து.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தையடுத்து, இயக்குநர் ஷங்கர் உருக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்தியன்-2 விபத்து பற்றி ஷங்கர் உருக்கம் | shankar emotional message after kamal's indian-2 crane accident mishap

கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2. ஷங்கர் இயக்கி வரும் இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும் வேதனையிலிருந்தும் இன்னும் மீளவில்லை. உதவி இயக்குநர் கிருஷ்ணா ஒரு மாதம் முன்புதான் என்னிடம் சேர்ந்தான். சரியான உதவி இயக்குநர் அமைந்துவிட்டார் என்ற சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம், கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்ற போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது. அதே போல ப்ரொடக்‌ஷன் பாய் மது, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் ஆகியோரின் மரனைத்தை கேள்விப்பட்ட போது துக்கம் தாளவில்லை. மேலும் இதையெல்லாம் பார்க்கும் பொழுது அந்த க்ரேன் என் மீது விழுந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு எனது அனுதாபத்தையும், சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor