திரௌபதி ரிலீஸ் - ''ஒரு சின்ன படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா?''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'திரௌபதி' படம் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின்  டிரெய்லர் சமூக வலைதளங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அந்த படத்தின் டிரெய்லருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன.

திரௌபதி படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ரோகினி தியேட்டர் கருத்து | Rohini Theatre about Rishi Richard, Karunas's Draupath

இந்த படம் வெற்றி பெற வேண்டி வன்னியர் வளர்ச்சி இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் ஸ்ரீமணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ரோகினி திரையரங்க மேலாளர் நிக்கிலேஷ்  சூர்யா, கிட்டத்தட்ட 1000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. ஒரு சிறிய படத்துக்கு  இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது என்பது பெரிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

'திரௌபதி' படத்தில் ரிஷி ரச்சர்டு ஷீலா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மோகன் ஜி இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் பிப்ரவரி 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Entertainment sub editor