திரௌபதி திரைப்படம் - படம் பார்த்த ஆடியன்ஸின் ரியாக்ஷன் என்ன தெரியுமா..? Exclusive Video Here.
முகப்பு > சினிமா செய்திகள்மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி படத்தை பார்த்த ஆடியன்ஸ் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன்.ஜி. இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் திரௌபதி. ரிஷி ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ், லேனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரௌபதியின் ட்ரெய்லர் வெளியாக பலதரப்பில் இருந்து சர்ச்சையான கருத்துக்களை பெற்றுள்ள நிலையில், இத்திரைப்படம் இன்று வெளியானது.
இதையடுத்து படம் பார்த்த பார்வையாளர்கள் பிஹைன்ட்வுட்ஸ் தளத்திற்கு பல்வேறு கருத்துக்களை கூறினார்கள். படம் சூப்பர், குடும்பத்துடன் வந்து அவசியம் பார்க்க வேண்டும் என பலர் தெரிவித்தனர். மேலும் இது பெண்களுக்கான படம், அவர்களின் பாதுகாப்பை பற்றியும் நாடக காதல் பற்றியும் சொல்கிற படம் என தெரிவித்தார்கள். மேலும் படத்தில் திரௌபதி கதாபாத்திரத்தின் நடித்தவர் அருமையாக நடித்திருப்பதாகவும், க்ளைமாக்ஸ் காட்சியில் கண்கள் கலங்கிவிட்டது எனவும் குடும்பத்துடன் வந்தவர்கள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் சொல்லப்பட்டது போல சாதி சர்ச்சைகள் பெரிதாக எதுவும் இல்லை, ஒவ்வொரு பெற்றோரும் இதை பார்க்க வேண்டும், மேலும் பெண்களின் பாதுகாப்புக்காக இந்த படத்தில் சொல்லப்பட்ட சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்' எனவும் படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்தனர்.
திரௌபதி திரைப்படம் - படம் பார்த்த ஆடியன்ஸின் ரியாக்ஷன் என்ன தெரியுமா..? EXCLUSIVE VIDEO HERE. வீடியோ