www.garudabazaar.com

”இனிமே நீங்க சாப்பிட கூப்டா, நான் …. ” விஜய்க்கு நெல்சன் ஜாலி பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் நேருக்கு நேர் பேட்டியில் நெல்சன் விஜய்யுடன் பிரியாணி சாப்பிட்ட தருணம் பற்றி பேசியது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Nelson jolly comment about vijay briyani treat

10 ஆண்டுகளுக்குப் பிறகு நேருக்கு நேர்….

பீஸ்ட்  படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதை அதன் ப்ரமோஷனுக்காக விஜய் தற்போது சன் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் என்ற நேர்காணல் நிகழ்ச்சியைக் கொடுத்துள்ளார். இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி ஆகும். இந்த நேர்காணலை படத்தின் இயக்குனர் நெல்சனே எடுத்துள்ளார். இது சம்மந்தமாக வெளியான ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகின. நேற்று இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

பேட்டியில் பகிர்ந்த விஷயங்கள்….

இந்த நேர்காணலில் பல விஷயங்களை விஜய் பகிர்ந்துகொண்டுள்ளார். பீஸ்ட் படத்தில் நெல்சன் குழுவினரோடு பணியாற்றிய அனுபவம், இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்கள், அப்பாவைப் பற்றி, மகன் சஞ்சய்யின் எதிர்காலம் பற்றி, பூஜா ஹெக்டேவின் தொழில்முறை நடிப்பு, ஜார்ஜியாவில் சர்ச்சுக்கு போனது என பல விஷயங்களை ஜாலியாகப் பகிர்ந்துகொண்டார். நெல்சன் குட்டி கதை ஒன்று கேட்க, புட்பால் மற்றும் புல்லாங்குழலை வைத்து ஒரு உருவகக் கதையையும் கூறி அசத்தினார்.

Nelson jolly comment about vijay briyani treat

விஜய்யை கலாய்த்த நெல்சன்….

இந்த பேட்டி கலகலப்பாக செல்ல இயக்குனர் நெல்சனும், அவரின் ஜாலியான கேள்விகளும் ஒரு காரணமாக அமைந்தன. விஜய்யைக் கலாய்க்கும் விதமாக நெல்சன் ‘நீங்க ஒருநாள் இன்னைக்கு என்கூட சாப்பிடலாம்னு கூப்டீங்க… நாங்களும் சரி இன்னைக்கு ராஜவிருந்து போலன்னு ஆசையா வந்தோம். ஆனால் நீங்க பேசிகிட்டே பிரியாணி பேக்கட்ட எடுத்து குடுத்து சாப்பிடுங்க சொல்லிட்டீங்க..’ எனக் கூற விஜய் ‘அதுதான்யா செம்ம டேஸ்ட்டா இருக்கும்’ எனக் கூறினார். அதற்கு நெல்சன் ‘சார் வாழ்க்கை புல்லா அததான சாப்பிட்டுட்டு இருக்கோம். ஆனா இனிமே நீங்க சாப்பிட கூப்டா வீட்டுலயே சாப்ட்டு வந்துடுவேன் சார்’ என சொல்ல, விஜய் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டு சிரித்தார்.

Nelson jolly comment about vijay briyani treat

தொடர்புடைய இணைப்புகள்

Nelson jolly comment about vijay briyani treat

People looking for online information on Nerukku Ner, Sun TV, Vijay will find this news story useful.