www.garudabazaar.com

BEAST FDFS: பீஸ்ட் பட முதல் ஷோ-க்கு டிக்கெட் 2000 ரூபாயாம்ல.. வெளிவந்த OFFICIAL தியேட்டர் கட்டண விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் FDFS (First Day First Show) டிக்கெட் விலை விவரங்கள் வெளியாகி உள்ளன.

Vijay Nelson Beast FDFS Ticket Price 2000 Rupees INR

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Vijay Nelson Beast FDFS Ticket Price 2000 Rupees INR

பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்தியதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்தியதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள், டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Vijay Nelson Beast FDFS Ticket Price 2000 Rupees INR

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக விஜய் - நெல்சன் கலந்து கொண்ட பேட்டி நேற்று சன் டிவியில் ஒளிபரப்பானது. 

Vijay Nelson Beast FDFS Ticket Price 2000 Rupees INR

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவும் உலகம் முழுவதும் துவங்கி உள்ளது. சாதாரண காட்சிகளுக்கு 300 ரூபாயும், 200 ரூபாயும் தமிழகம் முழுவதும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கர்நாடாகாவில் பீஸ்ட் FDFS காட்சிக்கு அதிகபட்சமாக 2000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக 400 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Nelson Beast FDFS Ticket Price 2000 Rupees INR

People looking for online information on Beast, Beast FDFS, Beast Ticket, Nelson, Sun Picture, Vijay will find this news story useful.