பிரபல டிவி சீரியல் நடிகையான வாணி போஜன் ஹீரோயினாக அறிமுகமாகவிருந்த திரைப்படத்தில், தற்போது அவருக்கு பதிலாக வேறு ஒரு சீரியல் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அந்த சீரியல் நிறைவடைந்த நிலையில், ‘N4’ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார்.
என் மகன் மகிழ்வன் படத்தை இயக்கிய லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘N4’ படத்தில் இருந்து நடிகை வாணி போஜன் திடீரென விலகியுள்ளார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் ஹீரோயின் சரண்யா இந்த படத்தில் நடிகக் ஒப்பந்தமாகியுள்ளார்.
இது குறித்து சரண்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், திரைப்படங்களில் நடித்தாலும், சீரியல் பணிகளும் போய்க் கொண்டு தான் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தர்மராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் உருவாகும் இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை ஹீரோவாக நடிக்கிறார். மேலும், அனுபமா குமார், அபிஷேக் ஷங்கர், வடிவுக்கரசி, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், அஃப்சல் ஹமீது, வினுஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் காசிமேடு சுற்றியுள்ளா பகுதிகளில் இம்மாடஹ் இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.