'மேயாதமான்' படத்துக்கு பிறகு இயக்குநர் ரத்ன குமார் இயக்கும் படம் 'ஆடை'. இந்த படத்தில் அமலா பால் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு பிரதீப் குமார் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தகவல் வெளியானது.
அதில், ஆபாச வார்த்தைகள் வரும் இடங்களில் மியூட் செய்துள்ளது. ஆபாசம் கருதி, நேரடியாக படத்தில் இடம்பெறும் நிர்வாண காட்சிகளை ட்ரிம் மற்றும் டி-ஃபோக்கஸ் செய்யப்பட்டுள்ளது. கண்ணாடி ஜன்னல் அருகே காமினி நிர்வாணமாக நிற்கும் காட்சி நீக்கப்பட்டது. மாடியில் காமினி நிர்வாணமாக அமர்ந்திருக்கும் காட்சி நீக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிவலிங்கம் வரும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. லிங்கம் என்று வரும் வார்த்தையும் மியூட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சைட் போஸில் காமினி அமர்ந்திருக்கும் காட்சியும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இருந்து மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ரம்யா, ஜெனிஃபர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.