"ஒரு நாளுக்கு முன்னாடி".. இறப்பு பத்தி பிரதாப் போத்தன் போட்ட FB Post.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகரும், திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான பிரதாப் போத்தன் இன்று (15.07.2022) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 69.
Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. இதான் தெலுங்கு தலைப்பா? ஆஹா இதுவும் செம்ம மாஸா இருக்கே!
1980 களில் இருந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடிகராக, திரைக்கதை எழுத்தாளராக, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர் பிரதாப் போத்தன்.
ஆகஸ்ட் 13, 1952 இல் பிறந்த இவர், ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு, பட்டப்படிப்பை சென்னை கிறித்துவக் கல்லூரியில் முடித்தார்.
மும்பை விளம்பர நிறுவனத்தில் நகல் எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரதாப், 1978 ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் 'ஆரவம்' திரைப்படத்தில் அறிமுகமானார். தகரம், ஆரோகணம், வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, பன்னீர் புஷ்பங்கள், தன்மாத்ரா, 22 பெண் கோட்டயம், படிக்காதவன் மற்றும் பெங்களூர் டேஸ் ஆகியவை அவரது பிரபலமான திரைப்படங்களில் சில. கடைசியாக மம்மூட்டி நடித்த 'சிபிஐ5: தி பிரைன்' படத்தில் பிரதாப் போத்தன் நடித்தார். மோகன்லால் இயக்கி வரும் 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ் ட்ரெஷரிலும் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமில்லாமல், தலைச் சிறந்த இயக்குனராகவும் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரதாப் வலம் வந்தார். மீண்டும் ஒரு காதல் கதை படத்தை இயக்கியதற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதையும் பிரதாப் போத்தன் வென்றுள்ளார். சினிமாவில் மிக முக்கிய நபராக வலம் வந்த பிரதாப் புதனின் மறைவு, திரையுலக பிரபலங்கள் மட்டும் இல்லாமல், ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், பிரதாப் போத்தன் தனது பேஸ்புக் பக்கத்தில், இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் பகிர்ந்த பதிவு, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அடிக்கடி ஜார்ஜ் கார்லின் உள்ளிட்ட பலரின் Quotes-களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் பிரதாப் போத்தன். அதே போல, நேற்றைய தினமும் நிறைய பகிர்வுகளை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்படி அவர் பகிர்ந்த பதிவு ஒன்றில், "ஒரு குறிப்பிட்ட அளவு எச்சிலை அதிக நேரத்திற்கு விழுங்கிக் கொண்டே இருந்தால், இறப்பு என்பது வருகிறது" என்ற பிரபல காமெடியன் மற்றும் எழுத்தாளரான ஜார்ஜ் கார்லினின் Quotes-ஐ பகிர்ந்துள்ளார்.
இறப்பு குறித்து பதிவை பகிர்ந்த ஒரு நாளுக்குள், பிரதாப் போத்தன் உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து பிரதாப் போத்தனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Also Read | சிவகார்த்திகேயன் அடுத்த பட Update.. "தளபதி ரஜினி Look-ஆ.?" - கொண்டாடும் fans