தளபதி விஜய்யின் 'பிகில்’ படத்தின் வெறித்தனமான Century - உற்சாகத்தில் ரசிகர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 13, 2020 02:40 PM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் யூட்யூபில் வெளியான வெறித்தனம் பாடலின் லிரிக் மற்றும் பாடல் வீடியோக்கள் ஒட்டுமொத்தமாக 100 மில்லியன் வ்யூவர்ஸை அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் விஜய் சேதுபதி, ராதிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க, சத்தியன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். எக்ஸ்.பி. நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரம் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தளபதி விஜய்யின் 'பிகில்’ படத்தின் வெறித்தனமான CENTURY - உற்சாகத்தில் ரசிகர்கள் வீடியோ