'மாஸ்டர்': தளபதி விஜய் நியூ லுக்கில் ஹீரோயினுடன் இருக்கும் ஃபோட்டோ டிரெண்டிங்
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி செம வைரலானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன், விஜய் டிவி புகழ் தீனா, மகேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் புதிய லுக்கில் தளபதி விஜய் ஹீரோயினுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Tags : Master, Vijay, Malavika Mohanan, Vijay Sethupathi