தளபதி ரசிகர் வரைந்த கார்ட்டூன்... நடிகை மாளவிகா மோகனன் கோபமான பதிவு... பாடகி சின்மயி ஆதரவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் ரசிகர் ஒருவர் வெளியிட்ட கார்ட்டூன் நடிகை மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன்னன் மிகவும் கோபமாகி உள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா  ஊரடங்கு நேரத்தில் மாஸ்டர் படக்குழு ஒரு வீட்டில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று சித்தரிக்கும் வகையில் ரசிகர் ஒருவர் வேடிக்கையாக ஒரு கார்ட்டூனை வெளியிட்டிருந்தார். அதில் மாளவிகா சமையல் செய்வது போன்று இருந்தது.

தளபதி ரசிகர் வரைந்த கார்ட்டூன் மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் கோபம் master actress malavika mohanan angry on sexiest cartoon of vijay fan

இதனை பார்த்த அவர் மூவி வீட்டில் கூட பெண்களுக்கு இதுதான் வேலையா? என்று கோபமாக கூறியிருந்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பதிவை நீக்கிவிட்டார். ஏன் என்று பலரும் குழம்பி வந்த நிலையில் அதற்கு பாடகி சின்மயி ஆதரவு அளித்துள்ளார். சின்மயி இதுபற்றி 'ஒரு பிரபல நடிகை, ரசிகர் ஒருவர் வரைந்த புகைப்படத்தில் தன்னை காட்டியிருக்கும் விதம் பிடிக்கவில்லை என்று கூறுகிறார். உடனே அவரை கேலி செய்து, குற்றப்படுத்தி, அவரது பதிவை அவரே நீக்கும்படி செய்கின்றனர். ஆனால் அப்படி மோசமாக வரைந்த கார்ட்டூன் ஆயிரம் ரீடிவிட்டுகளை பெற்றுள்ளது" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor