Pattamboochi

Photo: அஜித்குமாரின் AK61 பட ஷூட்டிங்.. வெளியான மஞ்சு வாரியரின் செம்ம சூப்பர் லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தின் படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார்.

Manju Warrier Joined AK 61 Movie Shooting Pictures Gone viral

Also Read | வாரிசு 3rd look.. "அட, விஜய் அமர்ந்திருக்கும் Bike-ல இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கா?"

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைந்துள்ளார்.

Manju Warrier Joined AK 61 Movie Shooting Pictures Gone viral

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார்.

Manju Warrier Joined AK 61 Movie Shooting Pictures Gone viral

இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். AK61 படப்பிடிப்பில் பணியாற்றும் நபர்களுடன் நடிகை மஞ்சு வாரியர் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

Manju Warrier Joined AK 61 Movie Shooting Pictures Gone viral

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்.. ஹீரோயின் இந்த முன்னணி இளம் நடிகையா? ஆஹா

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier Joined AK 61 Movie Shooting Pictures Gone viral

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie, Manju Warrier will find this news story useful.