www.garudabazaar.com

ரன்பீர் கபூர் & ஆலியா பட் குழந்தைக்கு பெயர் வச்சாச்சு.. பேருக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Ranbir Kapoor Alia Bhatt New Born Baby Name Raha

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். பெற்றோர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Ranbir Kapoor Alia Bhatt New Born Baby Name Raha

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் தேதி குழந்தை பிறந்தது.  மும்பை ஹெச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில்,  அனுமதிக்கப்பட்ட நடிகை ஆலியா பட்டுக்கு, பெண் குழந்தை  பிறந்தது.

இந்நிலையில் குழந்தைக்கு ஆலியா பட் & ரன்பீர் கபூர் பெயர் சூட்டியுள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆலியா பட் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ரஹா (பாட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்) என்ற பெயருக்கு பல அழகான அர்த்தங்கள் உள்ளன…

ராஹா, அதன் தூய்மையான வடிவத்தில் தெய்வீக பாதை என்று பொருள். சுவாஹிலியில்  மகிழ்ச்சி,சமஸ்கிருதத்தில் ராஹா என்பது ஒரு குலம். வங்காளத்தில் - ஓய்வு, ஆறுதல், நிவாரணம். அரபு மொழியில் அமைதி.

பொதுவாக மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் பேரின்பம் என்றும் இந்த பெயர் பொருள்படும். அவளுடைய பெயருக்கு ஏற்றவாறு, அவள் பிறந்த முதல் கணத்தில் இருந்து  நாங்கள் அதை உணர்ந்தோம்! ❤️

நன்றி ராஹா, எங்கள் குடும்பத்தை உயிர்ப்பித்ததற்கு, எங்கள் வாழ்க்கை இப்போது தான் தொடங்கியது போல் உணர்கிறேன்." என ஆலியா பட் குறிப்பிட்டுள்ளார்‌.

தொடர்புடைய இணைப்புகள்

Ranbir Kapoor Alia Bhatt New Born Baby Name Raha

People looking for online information on Alia Bhatt, Barcelona, Raha, Ranbir Kapoor, UNICEF will find this news story useful.