www.garudabazaar.com

“நீங்க shape-க்கு வரலன்னா வாய்ப்பிருக்காது…” ரசிகரின் எல்லை மீறிய comment-க்கு மஞ்சிமாவின் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Actress manjima mohan bold reply to fans comment

அறிமுகம்…

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படம்  மூலமாக தமிழில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து சில படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்' அவர் விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துல்கர் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Actress manjima mohan bold reply to fans comment

சமீபத்தைய படங்கள்…

கடந்த ஆண்டு மஞ்சிமா நடிப்பில் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் மற்றும் விஷ்ணு விஷாலுடன் நடித்த எஃப் ஐ ஆர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த இரு படங்களும் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. இதையடுத்து அவர் நடிப்பில் அக்டோபர் 31st லேடிஸ் நைட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இதைத் தவிர இப்போது அவருக்கு தமிழில் வேறு படங்கள் எதுவும் இல்லை.

Actress manjima mohan bold reply to fans comment

Questions and answers...

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மஞ்சிமா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் ரசிகர்கள் பல கேள்விகளைக் கேட்க சில சுவாரஸ்யமான கேள்விகளும் அமைந்தன. அதில் ஒருவர் “உங்களை எரிச்சலடைய செய்யும் கேள்வி எது?” என்று கேட்க, அதற்கு “கண்டிப்பாக உங்கள் கல்யாணம் எப்போது எனும் கேள்விதான்” என பதிலளித்துள்ளார்.

இப்படியாக நல்ல படியாக சென்று கொண்டிருந்த அந்த உரையாடலில் சில ரசிகர்கள் அத்து மீறி மஞ்சிமாவை body shaming செய்யும் விதமானக் கேள்விகளைக் கேட்டனர். அதில் சில கேள்விகளை நக்கலாக எடுத்துக் கொண்ட மஞ்சிமா, சில கேள்விகளுக்கு நெத்தியடி பதிலும் கொடுத்தார்.

Actress manjima mohan bold reply to fans comment

Body shaming….

அதில் ஒரு நபர் “ஓவர் வெயிட்… பாவம் அந்த பையன்” எனக் கூற அவருக்கு “எனது எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அக்கறைக் கொண்ட ஒரு நபர்” என நக்கலாக பதிலளித்தார். இதையடுத்து மற்றுமொருவர் “நீங்கள் shape கு வாருங்கள். இல்லையென்றால் சினிமாவில் இருந்து விரைவில் மறைந்துவிடுவீர்கள்.” என்று கூற அவருக்கு “சினிமா இண்டஸ்ட்ரி வெறும் புற அழகை மட்டுமே கொண்டு வாய்ப்புத் தரும் என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் தகவலுக்கு நன்றி “ என நறுக்கென்று பதிலளித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

“நீங்க SHAPE-க்கு வரலன்னா வாய்ப்பிருக்காது…” ரசிகரின் எல்லை மீறிய COMMENT-க்கு மஞ்சிமாவின் பதில்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress manjima mohan bold reply to fans comment

People looking for online information on Body Shaming, Instagram, Manjima will find this news story useful.