பொள்ளாச்சியில் ஜூட் விட்ட படக்குழு - ஜெயம் ரவி 25 படத்தின் Milestone அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடித்து வரும் 25வது திரைப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Jayam Ravi's 25th film shooting second schedule started in Chennai

‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சமீபத்திய சென்சேஷன் ஹீரோயின் நித்தி அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பொள்ளாச்சியில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

JR25 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் நேற்று (ஜூலை.30) சென்னையில் தொடங்கியதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தில் அசுதோஷ் ராணா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.15ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.