www.garudabazaar.com
iTechUS

K Viswanath : தனது ஐகானிக் ஹிட் பட ரிலீஸ் தேதியில் மரணித்த கே.விஸ்வநாத்.. மலரும் நினைவுகள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் நடிகரான கே.விஸ்வநாத் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

K Viswanath dies 2023 Feb 3 Sankarabharanam released in 1980 Feb 2

Images are subject to © copyright to their respective owners.

Also Read | King of Kotha : அடிபொலி.!! பண்டிகையில் ரிலீஸ் ஆகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’..

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கே. விஸ்வநாத். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகியவை இந்திய சினிமாவில் மிக முக்கிய  திரைப்படங்களாகும்.

நடிகராக கே. விஸ்வநாத், அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமலுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா ஆகிய படங்களில் தமிழில் நடித்துள்ளார்.

50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். இவர் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதையும் பெற்றுள்ளார். ஆறு முறை இந்திய அரசின் தேசிய விருதை வென்றவர். 8 முறை ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக கே.விஸ்வநாத் 2023 பிப்ரவரி 2-ஆம் தேதி காலமானார்.

K Viswanath dies 2023 Feb 3 Sankarabharanam released in 1980 Feb 2

Images are subject to © copyright to their respective owners.

கே.விஸ்வநாத் காலமான இதே பிப்ரவரி 2-ஆம் தேதி தான், அவருடைய ஐகானிக் திரைப்படமான சங்கரா பரணம் திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது,. கே.வி.மகாதேவன் இசையிலான இப்படம் 1980 ஆம் ஆண்டு வெளியானது, இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரபல இயக்குநர் பாலு மகேந்திரா. 4 தேசிய விருது பெற்ற இந்த படம் வெளியான அதே நாளில் கே.விஸ்வநாத் மறைந்துள்ளார்.

Also Read | HBD Simbu : "பிரச்சனை எனக்கு பாயசம்".. ஐ எம் எ லிட்டில் ஸ்டார் முதல் ஆல் ரவுண்டர் எஸ்.டி.ஆர். வரை!

K Viswanath dies 2023 Feb 3 Sankarabharanam released in 1980 Feb 2

People looking for online information on K Viswanath, Sankarabharanam will find this news story useful.