இந்த ஜோதிகா படத்தை புகழ்ந்து தள்ளிய மலேசிய அமைச்சர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 02, 2019 06:21 PM
டிரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்து வெளியான படம் ராட்சசி. இந்த படத்தை கௌதம் ராஜ் இயக்கியிருந்தார்.

அரசு பள்ளிகளில் நிலவும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து மலேசியா நாட்டின் கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''நேற்றிரவு ராட்சசி படத்தை அரசு அதிகாரிகளுடன் இந்த படத்தை பார்த்தேன். இந்த படத்தில் கீதா ராணி சிறந்த சூப்பர் ஹீரோவாக தோன்றுகிறார். பெரிய மாற்றங்கள் சாத்தியம் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.
நாங்கள் என்ன திட்டங்களும் மாற்றங்களும் கொண்டுரலாம் என்று இருந்தமோ அதைப்பற்றி இந்த படம் பேசுகிறது. உதாரணமாக ஆசிரயர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்த வேண்டும்.
மேலும் மாணவர்கள் இடைநிற்றலை பற்றியும் பேசியிருக்கிறது. இது தான் நாங்கள் தொடர்ந்து பணி செய்து வருகிறோம். மேலும் கீதா ராணி எல்லா மாணவர்களின் பெற்றோர்களையும் பார்த்து பேசுகிறார். மாணவர்களின் கல்வி சார்ந்து பெற்றோர்கள் செயல்பட அமைப்பை உருவாக்குகிறார்.எல்லா பெற்றோர்களும் கல்வியாளர்களும் மாணவர்களுக்கும் நான் இந்த படத்தை பரிந்துரைக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.