‘அவர் இல்லாம எதுவும் இல்ல.. அவர் தான் என்னோட ஜாக்பாட்..!’ - சூர்யா குறித்து ஜோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 27, 2019 09:32 PM
நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாக்பாட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கணவர் சூர்யா குறித்து ஜோதிகா பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜாக்பாட்’ திரைப்படத்தில் ஜோதிகா, ரேவதி, மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, மன்சூரலிகான், ஆனந்தராஜ், உள்பட பலர் நடித்துள்ளனர்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில், ஜோதிகா பேசுகையில், ‘என்னுடைய எல்லா விஷயங்களிலும் எனக்கு மிகப்பெரிய பலம் சூர்யா தான். என்னோட ஜாக்பாட் அவர் தான். குழந்தைகளை பார்த்துக் கொள்வதில் இருந்து வீட்டு வேலை பகிர்ந்துக் கொள்வது வரை அனைத்தும் செய்வார். ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது’ என்று கூறினார். அதேபோல், சூர்யா பேசுகையில், ‘என்னோட ஜோ.. என்னோட ஜாக்பாட்.. இன்னைக்கும் வேலையில் எவ்ளோ சின்சியரா இருக்கணும்னு ஜோதிகா பார்த்து தான் கத்துக்கிறேன்’ என்றார்.
மேலும், ஜோதிகா படம் குறித்து பேசியபோது, ‘ஹீரோவுக்கான கதையில் இரண்டு Old ஹீரோயின்களை நடிக்க வைத்துள்ளனர். இதுவரை நடித்த படங்களில் இது நிச்சயம் பவர்ஃபுல்லான கதை. அதிரடி ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும்போது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. ரேவதி மேமின் மிகப்பெரிய ரசிகை நான். இருவருக்கும் இணையான ரோல் இந்த படத்தில் இருக்கு’ என்றார்.
‘ஜாக்பாட்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.2ம் தேதி வெளியாகிறது.
‘அவர் இல்லாம எதுவும் இல்ல.. அவர் தான் என்னோட ஜாக்பாட்..!’ - சூர்யா குறித்து ஜோ! வீடியோ