தளபதி 64 ஷூட்டிங்கிற்கு ரெடியாகும் ஹீரோயின் - வைரலாகும் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை மாளவிகா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Malavika Mohanan shared Thalapathy 64 shooting spot picture

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதனை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் பேனரில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை மாளவிகா சமீபத்தில் இணைந்தார். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.