புது லுக்கில் நடிகர் விஜய் - 'தளபதி 64' படத்துக்காகவா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிகில்' படத்துக்கு பிறகு நடிகர் விஜய் 'மாநகரம்', 'கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Actor Thalapathy Vijay's new look Photos Goes viral

சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்டரியா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் தற்போது புது கெட்டப்பில் தளபதி விஜய்யின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த ஃபோட்டோவில் விஜய் ஒரு குழந்தையுடன் இருக்கிறார்.  இந்த புது லுக் தளபதி 64 படத்துக்காகவா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.