தளபதி 64: விஜய்யுடன் ஷூட்டிங்கில் இணைந்த ஹீரோயின்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 06, 2019 02:40 PM
'பிகில்' படத்துக்கு பிறகு நடிகர் விஜய் 'மாநகரம்', 'கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்டரியா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகன் இன்று முதல் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
Tags : Vijay, Thalapathy 64, Malavika Mohanan, Lokesh Kanagaraj