#VIKRAM: கமல் Fans-க்கு டபுள் Treat.. ஒரே நாளில் ஆடியோ & டிரைலர்… தெறி அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kamal vikram movie audio and trailer launch date announced

Also Read | சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் மோதும் சமுத்திரக்கனி.. வெளியான பரபர சூப்பர் மாஸ் SVP டிரெய்லர்!

நான்காண்டுக்குப் பின் கமல் படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் பல்துறை வித்தகராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் கமல்ஹாசன். 2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படம் கமல் நடிப்பில் வெளியானது. அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக அவர் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் அவரின் அடுத்த படமாக விக்ரம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

Kamal vikram movie audio and trailer launch date announced

படப்பிடிப்பு…

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக விக்ரம் படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தார் லோகேஷ். அதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா பாதிப்புகளால் அவ்வப்போது படப்பிடிப்பில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் கமல், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய மூன்று பிஸியான நடிகர்களை வைத்து மும்முரமாக படப்பிடிப்பை நடத்திவந்தார் லோகேஷ். மொத்தமாக 110 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

Kamal vikram movie audio and trailer launch date announced

பேன் இந்தியா ரிலீஸ்…

விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. படத்தின் ப்ரமோஷன் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தின் போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் வரையப்பட்ட ரயில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு சில நாட்கள் முன்னர் சென்றது கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து படத்தின் டீசர் அல்லது டிரைலர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.

Kamal vikram movie audio and trailer launch date announced

Double Treat…

இந்நிலையில் விக்ரம் படத்துக்காகக் காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இப்போது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான டிவீட்டில் “அனிருத்தின் எக்ஸ்ப்ளோசிவ்வான பாடல்களால் உங்கள் playlist-ஐ நிரப்பிக் கொள்ளுங்கள்” எனக் கூறி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர். மேலும் டிரைலர் பற்றி “ நமது மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் நடிகரிடம் இருந்து மற்றுமொரு பிரம்மாண்டமான கதை” எனவும் கூறப்பட்டுள்ளது. சற்று முன்னர் வெளியான இந்த அப்டேட் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

#VIKRAM: கமல் FANS-க்கு டபுள் TREAT.. ஒரே நாளில் ஆடியோ & டிரைலர்… தெறி அப்டேட்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal vikram movie audio and trailer launch date announced

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Kamal vikram movie Updates, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.