www.garudabazaar.com

”எனக்கு கிளாமர் பிடிக்கும்”, “என்ன ட்ரோல் பண்ண மீம்ஸ் பாத்தேன்”–மாளவிகா மோகனன் ஜாலி பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாளவிகா மோகனனின் திரை வாழ்க்கை:

malavika mohanan talk about acting glamour roles

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சார்ந்த இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகனின் மகள் ஆவார்.  ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

மாஸ்டர் தந்த பிரபல்யம்

ஆனால் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பரவலாக அறிந்து கொண்டது விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலமாகதான். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன்.  அவர் நடித்திருந்த சாரு கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. மாஸ்டருக்குப் பிறகு அவர் தனுஷோடு நடித்துள்ள மாறன் திரைப்படம் மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் மாளவிகாவின் புகைப்படங்கள்:

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் மாளவிகா முன்னணியில் இருப்பவர். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் அவர் பிஹைண்ட்வுட்ஸ் யுடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் பல ஜாலியான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Malavika mohanan okay with her troll memes

ஜாலி பேட்டியில் சில மொமண்ட்ஸ்:

அந்த பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள மாளவிகா மோகனன். கிளாமராக நடிப்பது குறித்து நீங்கள் ஏதாவது அளவுகோல் வைத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு ‘எனக்கு கிளாமர் பிடிக்கும். நான் எப்படி உடை அணிகிறேன் என்பதைப் பார்க்கிறீர்கள். உங்களை எது அழகாக தோன்ற செய்கிறதோ அதுதான் என்னைப் பொறுத்தவரை கிளாமர். சில நாட்கள் நான் மாடர்ன் ஆடைகள் அணிந்தால் அழகாக இருக்கும் என நினைப்பேன். சில நாட்கள் நான் கேரளா புடவை அணிந்தால் அழகாக இருக்கும் என நினைப்பேன். அது அந்தந்த நேரத்தை பொறுத்தது’ எனக் கூலாக கூறியுள்ளார்.

Malavika mohanan okay with her troll memes

அதுபோல மாஸ்டர் படத்தில் அவரின் கதாபாத்திரத்தை வைத்து ரசிகர்கள் உருவாக்கி பரப்பிய மீம்ஸ் பற்றியும் ஜாலியாக பதிலளித்துள்ளார். அதுபற்றி ‘நான் நிறைய மீம்ஸ்களைப் பார்த்தேன். அது ஜாலியான ஒன்றுதான். நீங்கள் ஒரு தொழில்முறை நடிகராக இருப்பதால் நீங்கள் உங்களையே கேலி செய்துகொள்ளவேண்டும். இல்லை என்றால் வாழ்க்கை மிகவும் கடினமாக மாறிவிடும்.’ என கூறியுள்ளார்.

BBultimate: உங்களுக்கு என்னங்க பிரச்சன… வாங்க உக்காந்து பேசுவோம் – அனித் சம்பத் vs பாலா!

தொடர்புடைய இணைப்புகள்

malavika mohanan talk about acting glamour roles

People looking for online information on மாளவிகா மோகனன், மாஸ்டர், Malavika Mohanan, Master Movie will find this news story useful.