www.garudabazaar.com

"சுயமரியாதைக்காக போராடுனாரு.. கொடுக்கவும் செஞ்சாரு".. விக்ரமனுக்கு கமல் புகழாரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Kamalhaasan praises Vikraman in bigg boss 6 Tamil

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

Kamalhaasan praises Vikraman in bigg boss 6 Tamil

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Kamalhaasan praises Vikraman in bigg boss 6 Tamil

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை தற்போது சண்டை , சச்சரவுகள் , கலவரங்கள், களேபரங்கள் அனைத்துமே சூடுபிடித்து இருக்கின்றன. குறிப்பாக அசீம் - விக்ரமன் மோதல், தனலட்சுமி - அசல் கோலார் மோதல், ஆயிஷா - அசீம் மோதல் என பலவிதமான மோதல்கள் உருவெடுத்தன. இதனிடையே, வார இறுதி எபிசோடில் போட்டியாளர்கள் முன்பு கமல் தோன்றி இருந்தார்.

Kamalhaasan praises Vikraman in bigg boss 6 Tamil

அப்போது கடந்த வார நடந்த பல விஷயங்களை பற்றி பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கமல் பேசினார். அப்போது, விக்ரமன் - அசீம் இடையே நடந்த வாக்குவாதம் பற்றி பேசிய கமல்,"விக்ரமன் சுயமரியாதைக்காக போராடினார். சுயமரியாதையை அசீம்க்கு கொடுத்தார். வெளியில் வந்தாலும் அவர் இப்படியே இருப்பார் என நம்புகிறேன். என்னையும் மரியாதையாக பேசுவார் என நம்புகிறேன்" என விக்ரமனைப் பாராட்டினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan praises Vikraman in bigg boss 6 Tamil

People looking for online information on BIGGBOSS TAMIL, BiggBoss6 Tamil, Vikraman will find this news story useful.