‘பாலிவுட் நடிகையில்லை..! தளபதி 64 ஹீரோயின் யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 26, 2019 02:44 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.
இதனையடுத்து மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 64 வது படமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி மற்றும் மாளவிகாமோகன் பெயர்கள் பரிசீலனையில் இருந்து. தற்போது மாளவிகாமோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.