www.garudabazaar.com

ராதிகாவின் சித்தி -2வில் மேஜர் சேஞ்ச் - இனி இவருக்கு பதிலாக இவரா ? - வெளியான ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராதிகாவின் 'சித்தி' பார்ட் 2 தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அத்தொடரின் படப்பிடிப்பு அரசின் அனுமதியைத் தொடர்ந்து மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

Major change in Radhika's Chithi 2 on Sun TV | சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராதிகாவின் சித்தி 2வில் மேஜர் சேஞ்ச்

தற்போது சித்தி முதல் பாகம் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நிலையில் இரண்டாம் பாகம் மீண்டும் சில நாட்களில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோவுடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உடல் நலக்குறைவு பிரச்சனைகள் உள்ள சில நடிகர்களை மாற்றியிருக்கிறோம். நாங்கள் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து வருகிறோம். பாதுகாப்பு என்பது முக்கியமானது. விரைவில் சித்தி -2 ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளார்.

இந்தத் தொடரில் முதலில் ராதிகாவிற்கு ஜோடியாக நடிகர் பொன்வண்ணன் நடித்திருந்தார். தற்போது ரேயான் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் ராதிகாவின் அருகில் நிழல்கள் ரவி இருக்கிறார். இதன் காரணமாக பொன்வண்ணனுக்கு பதிலாக நிழல்கள் ரவி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Major change in Radhika's Chithi 2 on Sun TV | சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராதிகாவின் சித்தி 2வில் மேஜர் சேஞ்ச்

People looking for online information on Chithi 2, Radhika Sarathkumar, Sun TV will find this news story useful.