இனி இவருக்கு பதில் இவரா ? - சன் டிவி சீரியலில் களமிறங்கும் பிரபல திரைப்பட நடிகை !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பு சமீபத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கியதன் காரணமாக மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர்கள் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Popular Actress plays major role in Sun Tv serial ft Azhagu, Oorvashi | சன் டிவி சீரியல் முலம் சின்னத்திரையில் களமிறங்கும் பிரபல நடிகை

சமீபத்தில் 'நாயகி' படப்பிடிப்பு தளத்தில் இருந்து  நடிகர் கிருஷ்ணா மற்றும் நக்ஷத்திரா இருவருடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இதனையடுத்து இந்த நாடகத்தில் நாயகன், நாயகி மாற்றம் என்று கூறப்பட்டது. மேலும் கதையிலும் பெருமளவு மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சன் டிவியில் 'அழகு' சீரியலில் நடிக்கும் நடிகர் அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சஸ்பென்ஸ் ! அழகு சீரியல் சுவாரஸியமான கதையுடன் , சஸ்பென்ஸூடனும் வருகிறது. பொருத்திருந்து பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த சீரியலில் தலைவாசல் விஜய் - ரேவதி இணைந்து நடித்திருந்தனர்.

தலைவாசல் விஜய்யுடன் இருக்கும் ஃபோட்டோவையும் அவினாஷ் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரேவதிக்கு பதிலாக ஊர்வசி நடிக்கலாம் என்றும் அது தான் அவினாஷ் தெரிவித்த சஸ்பென்ஸாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Popular Actress plays major role in Sun Tv serial ft Azhagu, Oorvashi | சன் டிவி சீரியல் முலம் சின்னத்திரையில் களமிறங்கும் பிரபல நடிகை

People looking for online information on Azhagu, Oorvashi, Sun TV will find this news story useful.