சசிக்குமார் புலன் விசாரணை செய்யும் புதுப்பட போஸ்டர் ரிலீஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சசிக்குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.

Sasikumar's Paramaguru first look Poster revealed

‘கென்னடி கிளப்’ திரைப்படத்தை தொடர்ந்து நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை சசிக்குமார் ஹீரோவாக நடிக்கிறார். ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் புலன் விசாரணை கதையம்சம் கொண்ட இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

‘பரமகுரு’ என தலைப்பிட்டுள்ள இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ரோனி ராஃபில் இசையமைத்துள்ளார். இதில் சசிகுமாருடன் குரு சோமசுந்தரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தவிர சசிக்குமார் நடிப்பில், 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'ராஜவம்சம்', 'நா நா' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.