ஜி.வி.பிரகாஷ் ஹாலிவுட் என்ட்ரி – கத்தியும் கையுமாக நடிக்கும் புது ரோல் இது தான்!
முகப்பு > சினிமா செய்திகள்வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து இயக்குநர் விஜய், பாலா, வெற்றிமாறன், அட்லி என்று பல்வேறு முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றிய அவர் இசையுலகில் தனக்கென தனி இடம் தேடிக்கொண்டார். இவர் குரலை ரசிக்கவும் ஒரு பட்டாளமே இருக்கிறது.

கடந்த ஆண்டு அவர் இசையில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இசை தவிர்த்து நடிப்பிலும் ஜி.வி.பிரகாஷுக்கு இருந்த திறமையை பல திரைப்படங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. இப்படி ஒவ்வொரு படியாக ஏறிய அவருக்கு ஹாலிவுட்டும் தன் கதவை திறந்துள்ளது.
ஒரு ராப் பாடகரின் கதையை பேசும் இந்த படத்துக்கு ’ட்ராப் சிட்டி’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஹாலிவுட் நடிகர் பிராண்டன் ஜாக்சன் நடிக்கிறார். டெல் கணேசன் தயாரிக்கும் இந்த படத்தை ரிக்கி புர்ச்சல் இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கிறார் என்று பிஹைண்ட்வுட்ஸ் டிவிக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் சில பாடல்களையும் பாடியுள்ளதாக கூறியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் ஹாலிவுட் என்ட்ரி – கத்தியும் கையுமாக நடிக்கும் புது ரோல் இது தான்! வீடியோ