சினேகாவிற்கு பிறந்த பெண் குழந்தை - மகிழ்ச்சியில் பிரசன்னா பகிர்ந்த ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது.
இதனையடுத்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சினேகாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகள் அணியும் குட்டி ஷூ போட்டோவை பகிர்ந்து தை மகள் வந்தாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
— Prasanna (@Prasanna_actor) January 24, 2020