தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் மாதவன். இவரது மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் வென்ற காட்சியை அவர் பதிவிட்டுள்ளார்.
![madhavan posts video of his son vendanth winning madhavan posts video of his son vendanth winning](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/madhavan-posts-video-of-his-son-vendanth-winning-news-1.jpg)
தமிழ் சினிமா மட்டுமன்றி இந்தி சினிமாவிலும் பிரபலமானவர் நடிகர் மாதவன். அலைபாயுதே, ரன், தம்பி என ஆரம்பித்து விக்ரம் வேதா வரையிலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை மாதவன் வைத்திருக்கிறார். இவரது மகன் வேதாந்த் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனது மகன் வெற்றி பெறும் காட்சியை மாதவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது குறித்த தன் பதிவில், 'எனது மகன் வெற்றி பெறுவதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் லைவ்வாக பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியாகவுள்ளது. இது ஒரு வித்தியாசமான உணர்வு. கடவுளின் ஆசிர்வாதம், எனது மனைவி மற்றும் மகனின் உழைப்புமே இதற்கு காரணம். ஊக்குவிப்பதை மட்டுமே நான் செய்தேன் என மாதவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவந்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல் !