’நிசப்தம்’ படத்தின் ரொமாண்டிக் புரோமோ சாங் - இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 17, 2019 01:28 PM
ஹேமந்த் மாதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் நடிக்கும் ‘நிசப்தம்’ திரைப்படம் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வர உள்ளது.
![Anushka Shetty, Madhavan starring Nishabdham movie promo song release Anushka Shetty, Madhavan starring Nishabdham movie promo song release](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/anushka-shetty-madhavan-starring-nishabdham-movie-promo-song-release-news-1.jpg)
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று மும்மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.அனுஷ்கா ’பாகமதி’, ‘சைரா’ படங்களுக்கு பிறகு நடிக்கும் இப்பட த்தில் வாய் பேசாத காது கேளாத ஆர்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘இரண்டு’ படத்திற்கு பிறகு ‘நிசப்தம்’ படத்தில் மீண்டும் அனுஷ்காவுடன் மாதவன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் ஆகியோர் இப்படத்தை இணைந்து தாயாரிக்கின்றனர்.
சஸ்பன்ஸ் ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் கோபி சுந்தர் இசையில் ஆலாப் ராஜு பாடிய ’நீயே நீயே’ பாடல் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
’நிசப்தம்’ படத்தின் ரொமாண்டிக் புரோமோ சாங் - இதோ வீடியோ