'ஜோதிகாவுக்கு இந்த பாட்டை எழுதுனது ஒரு மறக்கமுடியாத நாளில்.' - பாடல் உருவான சீக்ரட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல் குறித்து அதன் பாடலாசிரியர் உமா தேவி மனம் திறந்துள்ளார். 

ஜோதிகாவின் பாடல் உருவான கதை | lyricist uma devi opens on writing experience for jyothika's ponmagal vanthal kalaigiradhey kanave

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். இத்திரைப்படத்தை ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கியுள்ளார். இப்படத்தில் தியாகராஜன், பாக்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கோவிந்த வசந்தா இசையமைக்கும் இத்திரைப்படத்தை சூர்யா தயாரிக்கிறார். 

இந்நிலையில் இன்று கலைகிறதே கனவே என்கிற பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இதுகுறித்து அப்பாடலை எழுதிய உமா தேவியிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது, 'இப்பாடலை எழுதியது ஒரு மறக்க முடியாத நாளில். மார்ச் 8, மகளிர் தினத்தன்றுதான் இப்பாடலை எழுதினேன். அன்று எனக்கு வேறு சில மகளிர் தின கூட்டங்கள் இருந்தது. அதனால் அதில் பங்கேற்று பேசிவிட்டு, பிறகு பாடலை எழுதினேன். இப்படி அந்த கூட்டங்களில் பெண்களை பற்றி நான் பேசியது எல்லாம், இந்த பாடலை எழுதும் போது ஊக்கமாக அமைந்தது. அதுவே இப்பாடல் சிறப்பாக அமைய உதவியது' என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் ஜோதிகாவுக்கு இது நான் எழுதும் மூன்றாவது பாடல். இதற்கு முன்னர் மகளிர் மட்டும் படத்தில் எழுதிய அடி வாடி திமிரா பாடல் பெரிய ஹிட் அடித்தது. அதே போல 96 படத்திற்கு பிறகு கோவிந்த் வசந்தாவின் இசைக்கு பாடல் எழுதியுள்ளேன். கண்டிப்பாக இதுவும் மக்களை கவரும் என எதிர்ப்பார்க்கிறேன்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

'ஜோதிகாவுக்கு இந்த பாட்டை எழுதுனது ஒரு மறக்கமுடியாத நாளில்.' - பாடல் உருவான சீக்ரட்.! வீடியோ

Entertainment sub editor