இவங்க யாரு தெரியுமா ? பிரபல ஹீரோயினோட பொண்ணு - அப்படி அவங்க அம்மா மாதிரியே இல்ல ?!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, பிரபு தேவா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான படம் 'மின்சாரக் கனவு'. ஊலலலா, வெண்ணிலவே, தங்கத்தாமரை மகளே, ஸ்டிராபெரி பெண்ணே என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அதிரிபுதிரி ஹிட்.

குறிப்பாக இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கஜோலின் கண்களை பார்த்து அந்த பட நாயகன் பிரபு தேவா போல் பித்துப்பிடித்து அலைந்தவர்கள் ஏராளம். தொடர்ந்து ஹிந்தியில் முன்னணி ஹீரோயினாக இருந்த அவர் தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி 2 படம் மூலம் தமிழில் நடித்தார்.
நடிகை கஜோல் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். இந்நிலையில் நடிகை கஜோல் தனது மகள் நைசாவின் 17 வது பிறந்தநாள் முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைப்பருவம் முதல் தற்போது வரை பல்வேறு புகைப்படங்களின் தொகுப்பாக அந்த வீடியோ உள்ளது.