Nenjuku Needhi

“கடவுளின் தேசத்தில் கமல்ஹாசன்”… ‘விக்ரம்’ விநியோகஸ்தர் ஷிபு தமீன்ஸ் மாஸ் update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகிறது.

Kamalhaasan and lokesh kanagaraj will meet fans in kerala

Also Read | #Breaking: ‘தளபதி 66’ ஐதராபாத் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய விஜய்… Viral Pic

விக்ரம் Expectation…

கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Kamalhaasan and lokesh kanagaraj will meet fans in kerala

வெளியீடு…

ஆரம்பம் முதலே இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகாகவே இருந்துவரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.  படத்தை தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

Kamalhaasan and lokesh kanagaraj will meet fans in kerala

டிவிட்டரில் அங்கீகாரம்…

இதையடுத்து தற்போது டிவிட்டரில் இந்த படத்துக்கான தனி எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது. #VikramInAction என்ற ஹேஷ்டேக்கோடு விக்ரம் படத்தில் கமலின் தோற்றத்தோடு கூடிய அந்த எமோஜி தற்போது டிவிட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கமல் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.

Kamalhaasan and lokesh kanagaraj will meet fans in kerala

கேரள ரசிகர்களை சந்திக்கும் கமல்…

விக்ரம் படத்தை கேரளாவில் பிரபல விநியோகஸ்தரான ஷிபு தமீன்ஸ் வெளியிடுகிறார். இதையடுத்து வரும் மே 27 ஆம் தேதி கமல்ஹாசன் கேரள ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை சந்திக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கமலுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம்பெறுவார் என்று அறிவித்துள்ளார். கொச்சியில் உள்ள ஒரு தனியார் மாலில் இந்த சந்திப்பு நடக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கமலின் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.

Also Read | டாணாக்காரனுக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம்… Title உடன் வெளியான மிரட்டலான போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan and lokesh kanagaraj will meet fans in kerala

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram Movie, Vikram Movie Updates will find this news story useful.