Nenjuku Needhi

உக்ரைன் நடிகையுடன் சிவகார்த்திகேயன் டான்ஸ்.. புகைப்படங்களுடன் வெளியான #SK20 அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் SK20 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

SK 20 Sivakarthikeyan Dance Rehearsal at High on Dance Studio

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். 

SK 20 Sivakarthikeyan Dance Rehearsal at High on Dance Studio

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நவீன் பொலிசெட்டியும் நடிக்க உள்ளார். 

சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இவர் போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் பணிபுரிந்துள்ளார் மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் இப்படம் படமாக்கப்படவுள்ளது. 

SK 20 Sivakarthikeyan Dance Rehearsal at High on Dance Studio

இந்நிலையில், இப்படத்தின் பாடல் - நடன காட்சிகளுக்கான ஒத்திகை சென்னை ஹை ஆன் டான்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதற்கான புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட HOD ஸ்டூடியோ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகை Maria Ryaboshapka கலந்து கொண்டுள்ளார்.

SK 20 Sivakarthikeyan Dance Rehearsal at High on Dance Studio

SK 20 படத்தின் தலைப்பு, முதல் லுக் போஸ்டர் இன்னும் அறிவிக்கப்படுவதற்குள்ளே படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

SK 20 Sivakarthikeyan Dance Rehearsal at High on Dance Studio

People looking for online information on Dance, High On Dance, HOD, Maria Ryaboshapka, Sivakarthikeyan, SK20 will find this news story useful.